
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது. அதில் முக்கியமான ஒரு சில கதாநாயகர்களால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்திருந்தனர். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் இளம் கதாநாயகர்கள் வளர்ந்து வர பெரிதும் உதவியிருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் தன்னுடன் நடிக்க வைத்து வளர்த்துவிட்ட பெருமை அவரே சாரும். எனவே, நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்த் மறைந்த அன்று அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். படப்பிடிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த சூர்யாவால் நேரில் வர முடியவில்லை. இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சமாதி இருக்கும் இடத்திற்கு சென்ற நடிகர் சூர்யா அவரை வணங்கி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு, கதறி அழுதுவிட்டார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Actor #Suriya Payed His Last Respect To Actor & Politician #Vijaykanth Today????????pic.twitter.com/y5AaB5upAI
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 5, 2024