‘காதல் கொண்டேன்’  பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா?… புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்,, நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

   

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் , யுவன் ஷங்கர் ராஜா என அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

காதல் கொண்டேன்  திரைப்படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் மற்றும் செகண்ட் ஹீரோவாக சுதீப்  இருவரும்  திரை உலகில் அறிமுகமானவர்கள்.

இதில் சோனியா அகர்வால் முன்னணி ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஆதியாக நடித்த சுதீப்பிற்கு அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இத்திரைப்படத்தை தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு, காதல் செய்யவும் போன்ற படங்களில் நடித்த சுதீப் பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காமல் சின்ன திரையில் கால் பதித்தார்.

தற்பொழுது இவர் ஹிந்தி, பெங்காலி படங்களிலும், பல டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காக்கி உடையில் டிரைவர் தோற்றத்தில் இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

காதல் கொண்டேன் நடிகருக்கு இப்படி ஒரு நிலையா? என   ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்த ‘வங்கி விளம்பர படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.