
நடிகை தமன்னா
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நாயகியாக வலம் வந்த தமன்னா, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்த நிலையில், அந்த படத்தில் அவர் நடனம் ஆடிய காவாலா பாடலுக்கு நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டானது. மேலும் இந்த பாடலை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோ செய்தனர்.
மாலத்தீவு வீடியோ
நடிகை தமன்னா தற்போது ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ள நிலையில், அங்கு விதவிதமான கிளாமர் ஆடைகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.