
நடிகை தமன்னா
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நாயகியாக வலம் வந்த தமன்னா, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வெப் தொடர்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்த நிலையில், அந்த படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பெரிய ரீச் பெற்றார். மேலும் இந்த பாடலை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோ செய்தனர்.
தமன்னா போலவே இருக்கும் பெண்
சோசியல் மீடியாவில் தமன்னாவை போலவே காவாலா பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அச்சு அசல் அப்படியே தமன்னா போலவே இருக்கும் பெண் ஒருவர் காவாலா பாடலுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவுகிறது.
தமன்னா சாயல் அப்படியே இருக்கு pic.twitter.com/AOdl6Dcw7l
— ???????????????? ???????????????? ???????????? & ???????????????? (@FilmFoodFunFact) September 24, 2023