தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் 1 கிராம் வெயிட் ஏறாது.. ரகசியத்தை சொன்ன பிரபல இயக்குனர்…!!

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் நடித்து, தற்போது திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பல நிலைகளில் தன்னை மேம்படுத்தியுள்ளார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50 வது படத்தின் போஸ்டர் சமூக வளைதள பக்கத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படம் வட சென்னை பகுதியில் கெங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங், தற்போது தொடங்கி இருப்பதாக  கூறப்படும் நிலையில், அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் கையில் இருக்கும் அரை டஜன் படங்கள், முழு லிஸ்ட் - Tamilstar

   

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படம் கேப்டன் மில்லர். இந்த  படத்தின் ரிலீசுக்காக தான் அவரது ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் என நடித்து இருப்பதால், இந்தியா முழுவதும் இவருக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

கருத்து

தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் படத்தை இயக்கி வந்தவர் R பால்கி. இவர் தற்போது அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில், தனுஷ் பற்றி வியந்து பேசி உள்ளார். அதில் தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும், அவருக்கு ஒரு கிராம் கூட எடை அதிகமாகாது என பால்கி கூறியுள்ளார்.

Dhanush captain miller movie shooting stop