நடிகை திரிஷாவுக்கு திருமணமா? திருமண கோலத்தில் வெளியான திரிஷா புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!

நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து வைத்துள்ள நடிகை திரிஷா, சூர்யா நடிப்பில் 2002 -ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரிஷா இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா?.. இப்படி ஒரு அழகா!

   
திருமண கோலத்தில் திரிஷா போட்டோ

இந்நிலையில் திரிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், நடிகை திரிஷாவுக்கு திருமணமா? என்று பதிவிட்டு வந்தனர். ஆனால் அது விளம்பரத்திற்காக எடுக்கபட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்,

Gallery