மகள் இறந்த துயரத்தில் இருந்து…!! துணிச்சலான முடிவு எடுத்த நடிகர் விஜய் ஆண்டனி..??

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் ஆண்டனி இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக தனது திரைப்பயண வாழ்க்கையை ஆரம்பித்தார். அதை தொடர்ந்து .இவர் நான் அவன் இல்லை,  வேலாயுதம்,  பிரியாணி,  சலீம்,  பிச்சைக்காரன்,  சைத்தான்,  திமிரு புடிச்சவன்,  கோடியில் ஒருவன் போன்ற படங்களில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

   

இவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல நடிகராகவும் நடித்துள்ளார். இவர் மரியாதை, பந்தயம், வேட்டைக்காரன், நான் சலீம்,  சைத்தான் , அண்ணாதுரை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.  சமீப காலமாக இசை அமைப்பாளர்கள் தொடர்ந்து இசை  நிகழ்ச்சியை  நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி மீண்டும் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அந்த வகையில் கோயம்புத்தூரில் டிசம்பர்2 தேதியும் பெங்களூரில் டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31 ஆம் தேதியும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடங்கள் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.