
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அழைப்பர். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடகப் பாடகி ஆவார்.
விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 என்ற படத்திலும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
விஜய்யின் மகள்
விஜய்யின் மகளான திவ்யா சாஷா சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த நிலையில், இவருக்கு தற்போது 18 வயதாகின்றது. இவர் தற்போது வெளிநாட்டில் தங்கி படித்து வருகிறார். மேலும், இவர் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
அந்த படத்தில் சிறிய பிள்ளையாக இருந்த திவ்யா சாஷா, தற்போது செம மாடர்னாக மாறியிருக்கிறார்.