நீ பெரும் கலைஞன்…. சீயான் விக்ரமின் பிறந்தநாள்…. நீங்கள் பார்த்திராத அன்சின் புகைப்படங்கள் இதோ…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவரான சியான் விக்ரம் தன்னுடைய 58 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

   

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவரின் தந்தை தமிழில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விக்ரமுக்கு மிக எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல போராட்டத்திற்குப் பிறகு என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தந்து விட்டேன் என்னை, மீரா, காவல் கீதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். விக்ரமன் இயக்கத்தின் வெளிவந்த புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் விக்ரம்.

அதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் இவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.

அதன் பிறகு சாமுராய், காதல் சடுகுடு, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், தாண்டவம், மகான் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

ஒவ்வொரு கேரக்டரிலும் தன்னுடைய மெனக்கடலான நடிப்பு மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது வரை ஹீரோவாக நடித்த அசத்தி வருகிறார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் டப்பிங் செய்து வருகிறார். இவரின் நடிப்புக்கு தேசிய விருது, பிலிம்பேர் விருது, எடிசன் விருது, மாநில அரசு விருது என கிடைக்காத அங்கீகாரமே கிடையாது .

அதிலும் கடைசியாக இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து நம்மை அசர வைத்திருந்தார்.

தனது மகன் நடிக்க வந்த போதிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்த அசத்தி வரும் சியான் விக்ரமுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.