மரங்களின் காதலன்…! மறைந்தாலும் வாழும் கலைஞன் விவேக்கின் அன்சீன் புகைப்படம்…!!!

மறைந்தாலும் மக்கள் மத்தியில் நீங்கள் இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என்ற பட்டத்திற்கு பொருந்தக்கூடிய இவர் தன்னுடைய நகைச்சுவை மூலமாக பல சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

   

சிரிப்பதோடு மட்டும் இல்லாமல் சிந்திக்க வைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தவர் நடிகர் விவேக். சினிமாவில் கிட்டத்தட்ட 220க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த இவர் காமெடி நடிகராகவும் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார்.

அதிலும் குறிப்பாக பெண் சிசுக்கொலை, மூடநம்பிக்கை, ஜாதி அரசியல், ஊழல் உள்ளிட்ட அனைத்தையும் சிரிக்கும் வகையில் கூறி சிந்திக்க வைத்தவர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சீடனாகவும் இவர் இருந்திருக்கிறார். அவரது பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி பல லட்சம் மரங்களை நட்டு இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார்.

இவரது மறைவு இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. இன்று அவருடைய மூன்றாவது ஆண்டு நினைவு தினம்.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பலரும் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரின் புகைப்படங்கள் இதோ..