
கடந்த 2009 ஆம் வருடத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விமல். அதன் பிறகு அவர் நடித்திருந்த களவாணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் மூலம் பிரபலமான அவர், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எனினும், களவாணி திரைப்படத்திற்கு பிறகு அவரின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சமீப நாட்களாக, அவரின் திரைப்படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், தனது திருமணம் பற்றி கூறியிருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, என் அத்தை மகளை தான் திருமணம் செய்தேன். அவர் டாக்டர், நான் ஆக்டர். இருவரும் காதலித்தோம். எங்கள் திருமணம் சுவாமி மலையில் நடைபெற்றது. ஓடிப்போய் தான் கல்யாணம் பண்ணோம். நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு, அவ்வாறு திருமணம் செய்தது நான் தான் என்று கூறியிருக்கிறார்