50 வயதை கடந்த நடிகர் வினித் இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வினித். இவர் கேரளாவில் பிறந்தவர். இவரது குடும்பம் கேரளாவில் பெரிய குடும்பம். தந்தை ராதாகிருஷ்ணன் ஒரு பெரிய வக்கீலாகவும் , தாய் சாந்தகுமாரி டாக்டராகவும் இருந்தனர். ‘ஆவாரம் பூ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது கதாபாத்திரமான ‘சக்கரை’ இன்றும் மக்களின் நினைவில் நிற்கக்கூடியது.

   

அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். நாட்டிய பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு மிகவும் நெருங்கிய  சொந்தக்காரர். 2004 ஆம் ஆண்டு நடிகர் வினித் பிரிசில்லா மேனனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2006ம் ஆண்டு அவந்தி என்ற மகள் பிறந்தார்.

நடிகர் வினித்  சிறப்பாக பரதநாட்டியம் ஆடுவார். அதற்கு சான்றாக அவர் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு பாடலில் பரதநாட்டியம் ஆடி இருப்பார். சந்திரமுகி, காதல் தேசம், பிரியமான தோழி, தேவதை, உளியின் ஓசை, கட்டபொம்மன் போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள்.

50 வயதைக் கடந்தும் நடிகர் வினித் தற்பொழுது வரை பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது நடிகர் வினித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்’ நடிகர் வினிதா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.