
சினிமா பிரபலங்கள் சிலர் கல்விக்காக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து பல மாணவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்திருக்கிறார்.
அந்த வகையில், தற்போது நடிகர் விஷால் மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறார். தனது 34-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து மாணவர்களிடம், அன்பாக உரிமையுடன், நன்றாக படிப்பாயா? அப்பாவை காப்பாற்றுவியா? படித்தால் தான் உதவி செய்வேன் என்று மிரட்டுவது போல் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.