வெளிநாட்டிற்கு தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திருப்பூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் தஞ்சை ராஜேஷ் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர், இவரது தாய் நாகமணி ஒரு நடன  கலைஞர் இவருக்கு எட்டு வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட்டார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருப்பதியில் உள்ள வைளாங்கண்ணி, ஸ்ரீ வித்யாநிகேதன் சர்வதேசப்  பள்ளியில் படித்தார்.

   

அதன் பிறகு சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்  பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். அதன் பிறகு ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது திரை பயணத்தை தொடங்கினார்.

2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவளும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து  ஆச்சாரியங்கள், புத்தகம், ரம்மி,  கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,  திருடன் போலீஸ்,  அட்டகத்தி,  சட்டப்படி குற்றம்,  உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

2015 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து முப்பரிமாணம்,  வட சென்னை,  கானா,  டிரைவர் ஜமுனா, நம்ம வீட்டு மாப்பிள்ளை,  பூமிகா, போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இன் இந்தியன் கிச்சன்,  ரன் பேபி ரன்,  சொப்பன சுந்தரி, தீர காதல் போன்ற பல படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதை தொடர்ந்து இவர் துருவ நட்சத்திரம், மோகன்தாஸ்,  தீயவர் குலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களில்  நடித்துவருகிறது.  இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு வெளியான  ‘சுழல் சுழல்’ என்ற வெப் சீரியசிலும் நடித்துள்ளார்.இவர் ‘சிங்க  அரசர்’ என்ற படத்திற்கு டப்பிங்கும் செய்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படமானது இணையத்தில்  வெளியாகிய வைரலாகி வருகிறது.