ரஜினி படத்துக்கே கண்டிஷன் போட்ட சத்யராஜ்.. என்னன்னு தெரியுமா?..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் ‘கூலி’. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படத்தின்  பட  பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் திரைக்கதை முழுவதும் தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக படத்தில் நடிக்கும் பிரபலங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

   

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் மகள் கதாபாத்தித்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்தியராஜ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க சத்யராஜ்  நிபந்தனை விதித்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் இப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக தன்னுடைய கேரக்டர் இருக்க வேண்டும் என்றும் ஒருவேலை அப்படி இல்லை என்றால் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் எனவும் கூறப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் சத்யராஜ் சத்யராஜ் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டு என்றால் தன்னுடைய கேரக்டர் முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே பார்ப்பார் என்றும் சம்பளம் அதிகம் கொடுத்தாலும் தனக்கு பிடிக்காத கேரக்டரில் நடிக்க மாட்டார் என்றும் தான் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.சத்யராஜ் தனக்கு பிடித்தமான கேரக்டர் இருந்தால் மட்டும் ‘கூலி’ படத்தில் நடிப்பார். என்றும் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறியதாக வெளியான தகவல் வதந்தி என்று  கூறப்பட்டு வருகிறது.