இந்த புகைப்படத்தில் கியூட்டாக மேக் அப் போட்டிருக்கும் சிறுகுழந்தை யார் தெரியுமா?… இவர் இன்று பிரபல நடிகை… கண்டுபுடுச்சிடீங்களா?…

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை அனுபமா தனது instagram பக்கத்தில் தன்னுடைய சிறு வயதில் எடுத்த புகைப்படங்களையும், தற்போது எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

   

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுமா பரமேஸ்வரன் . தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இதை தொடர்ந்து தமிழில் தனுஷுடன் இணைந்து ‘கொடி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியானார் நடிகை அனுபமா.

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘தள்ளி போகாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ‘பிரேமம்’ படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியன் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

‘கொடி’ திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் நடிகை அனுபமா. மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த சிறு வயது புகைப்படத்தில் மிகவும் க்யூட்டாக, பூ, பெரிய பொட்டு என வைத்து மிகவும் அழகாக காணப்படுகிறார். தற்பொழுது இவரின் இந்த புகைப்படங்களை கொண்ட வீடியோவானது இணையத்தில் படு வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து டிரண்டாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…