கேரள முறைப்படி… மஞ்சுமேல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்த நடிகை அபர்ணாதாஸ்… வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் டாடா என்ற படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்ற அபர்ணாதாஸுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

 

 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை அபர்ணாதாஸ். 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை கேரளாவில் முடித்தார்.

அதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக படித்துக் கொண்டிருக்கும் போதே பத்திரிக்கையில் மாடலாக பணியாற்றி வந்தார். டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமான இவர் நான் பிரகாஷ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவு கை கொடுக்கவில்லை என்றாலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து கவின் நடித்த டாடா திரைப்படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் தமிழ் மலையாள மொழிகளில் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த தீபக் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களுக்கு இன்று கேரள முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.