செல்ல மகளின் 3-வது பிறந்தநாள்… குடும்பத்துடன் கொண்டாடிய ஆர் கே சுரேஷ்… வைரல் புகைப்படங்கள்…!!

தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்கள். ஒரு சிலர் தங்களது படங்களை தாங்களே நடித்து தயாரித்து வருகிறார்கள்.

   

அப்படி ஒரு அவதாரம் எடுத்தவர் தான் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ். தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற திரைப்படங்களை தயாரித்தவர்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானார்.

ஆர் கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியரான மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த மது ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

இதற்கு இடையில் அவர் ஆருத்ரா நிறுவனம் மோசடி வழக்கு காரணமாக சென்னையில் இருந்து தலைமறைவாகி வெளிநாட்டு சென்றிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பி விசாரணையில் கலந்து கொண்டார் ஆர்கே சுரேஷ்.

இன்று தனது மூத்த மகள் ஸ்ரேயாவின் மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது.