
நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடித்து பிரபலமானவர். அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அந்த வழக்கு திட்டமிடப்பட்ட சதி என்றும் தவறாக தன் மீது வழக்கு தொடர்ந்ததாகவும் நீதிமன்றத்தில் வாதாடி வழக்கிலிருந்து விடுபட்டு விட்டார்.
அதன் பிறகு, அவர் குறித்து எந்த செய்திகளும் வெளிவரவில்லை. திடீரென்று சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது, கற்பு என்பது புனிதமானது. இந்த மாடர்ன் உலகத்தில் பெண்களுக்கு அது புரிவதில்லை.
என்னை குறித்து தவறான தகவல்களை பரப்பி விட்டு என் பெயரை கெடுத்து விட்டார்கள். எனக்கு மன உளைச்சலை தந்தனர். தற்போது தமிழ் திரைப்படங்களில் நான் நடிப்பதில்லை. தெலுங்கு திரை உலகிற்கு சென்று விட்டேன். பல சிரமங்களை தாண்டி நான் நிற்க காரணம் என் அம்மா தான்.
நடிகை சரோஜா தேவியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவருக்கு கிடைத்தது போன்ற கதாபாத்திரம் எனக்கு அமையவில்லை. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உதவி வருகிறேன். திரை துறையில் திறமை இருப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும். யாரையும் நம்பி வர முடியாது. என் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் என்னை அதிகம் பாதித்துவிட்டது. ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.