
தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவர் தான் தீபா வெங்கட் இவர். ஜூன் 11ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு மும்பை மாநிலத்தில் பிறந்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ‘பாசமலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இதன் பின் தீபா அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழில் பரவசம் ,தில், உள்ளம் கொள்ளை போகுதடா,பாப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் நடிகை மட்டுமல்ல வானொலி தொகுப்பாளினியும் கூட. அதோடு இவர் பிரபல டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வலம் வந்து கொண்டுள்ளார்.
10 ஆண்டுகளாக வானொலி ஆர்ஜே-வாக பணியாற்றினார். பிறகு சிறிது பிரேக் எடுத்துக் கொண்டு கரன்சில் யுஜி, பிஜி கோர்ஸ் முடித்தார்.
படிப்பை பாதிக்காமல் டப்பிங், ஆக்டிங் என்று பரபரப்பாக இயங்கி வந்தவர் நடிகை தீபா வெங்கட்.
முதல் வருஷம் படிக்கும்போதே ‘அப்பு’ படத்தில் தேவயானிக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதுவே அவரது முதல் ஹீரோயினி டப்பிங் ஆகும்.
இதை தொடர்ந்து டப்பிங் வாய்ப்புகள் குவிந்தன. ஆனந்தம் ,கன்னத்தில் முத்தமிட்டால், ஏழுமலை வாரண மாயிரம், வெடி, மயக்கம் ,தெய்வத்திருமகள், ருத்ரா தேவி, செக்க சிவந்த வானம், என பல படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
சிம்ரன், நயன்தாரா, சங்கீதா. தனிஷ்கா, அனுஷ்கா செட்டி, ஜோதிகா, காஜல் அகர்வால், ரிச்சா போன்ற பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
ஒருபக்கம் படம் நடித்து கொண்டும், மற்றொருபக்கம் சீரியலிலும் மிகவும் பிசியாக இருந்து வந்தவர் தீபா வெங்கட் .
இவர் 1996 ஆம் ஆண்டு சன் டிவி ஒளிபரப்பான ‘தென்றல்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து ‘சித்தி’ சீரியல் மூலமாக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ரோஜா,கோலங்கள் போன்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவரது குடும்பப் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.