
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் வருடத்தில் சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான சூர்யவம்சம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அத்திரைப்படத்தின் பாடல்களும் நகைச்சுவை காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துமே தற்போது வரை ரசிகர்களால் பேசப்படுகிறது.
பலருக்கும் விருப்பமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் சூர்யவம்சம் திரைப்படம் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தேவயானி தன் கணவர் ராஜகுமாரனுடன் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தேவயானியின் கணவரான ராஜகுமாரன் சூர்யவம்சம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
அந்த காட்சியில், மணிவண்ணன் பேருந்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்ப சொல்லி தெரிந்த உறவினர் போல பேசி அவர்களை குழப்பி விடுவார். அதேபோல் பேருந்தில் இருக்கும் தூங்கிக்கொண்டிருக்கும் ராஜகுமாரனையும் எழுப்பி அவரிடம் பேச தொடங்கும் முன், அவரே தெரிந்த உறவினர் போன்று பேசி மணிவண்ணனை குழப்பி விட்டுவிடுவார். அந்த காட்சி மறக்க முடியாத காட்சி என்று தேவயானி பகிர்ந்துள்ளார்.
மேலும், ராஜகுமாரன் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய ஒரு நடிகர் சொதப்பிவிட்டதால், நான் அந்த காதசியில் நடிக்க வேண்டியதாயிற்று என்று கூறியிருக்கிறார்.