
நடிகை தேவயானி ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர். அவரின் அழகு, குழந்தை தனமான பேச்சு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. மேலும் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலேயே நடித்து மக்களிடையே பிரபலமான அவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின், சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களில் அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவையானியின் பண்ணை வீட்டில் நினைத்த நேரத்தில் சுவிட்சை ஆன் செய்தால் மழை பெய்யும் வகையில் அமைத்துள்ளனர்.
தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் தன் வீட்டை காண்பித்து மழை பெய்யும் அந்த இடம் குறித்து விளக்குகிறார். மேலும், அவர் கூறுகையில் கோடை காலங்களில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் இங்கு வந்து மழை நீரை போட்டு விடுவோம் குளிர்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.