
தென் இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகர்கள் அனைவருமே இவருடன் நடித்து விட்டார்கள். அழகும், நடிப்பு திறமையும் அதிகம் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தன் வசீகரிக்கும் அழகால், ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி.
அதன் பிறகு, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகி இருந்தார். அவரின் மறைவுக்குப் பின், அவரின் மூத்த மகளான ஜான்வி கபூர், “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான மில்லி என்னும் படம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இவரின் கைவசம் பல படங்கள் உள்ளன. இதற்கிடையில் ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலிப்பதாக தகவல்கள் பரவியது.
இருவரும், ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வபோது வெளியாகும். இந்நிலையில், ஜான்வி கபூர் தன் காதலரை ரகசியமாக சந்தித்துவிட்டு அவருடன் காரில் வரும் போது வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் முகத்தை மறைக்கும் அந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.