பாக்கவே பயங்கரமா இருக்கே.. இது என்னடா ரவுடி கட்டு..? வித்தியாசமான கெட்டப்பில் வந்த ஜோதிகா.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

நடிகை ஜோதிகா 90களில் முன்னணி கதாநாயகியாக, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் அவருக்கான கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் மற்றும் சிம்பு என்று முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.

புகழின் உச்சியில் இருந்த அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, சிறிது வருடங்கள் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் மறுபிரவேசம் செய்தார். அதன் பிறகு கதாநாயகி முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

   

இதனிடையே, அவர் தன் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறி விட்டார். அது பற்றி பல வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது சூர்யாவை அவரின் குடும்பத்திலிருந்து பிரித்து ஜோதிகா மும்பைக்கு அழைத்து சென்றுவிட்டதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

மேலும் சிவகுமாருக்கும், ஜோதிகாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால், அவர் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜோதிகா தற்போது நடித்துள்ள சைத்தான் திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு சூர்யாவுடன் கெத்தாக வந்துள்ள ஜோதிகா ரவுடி கெட்டப்பில் வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்திருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள், மாமனார் குடும்பத்தை பிரிந்து ஜோதிகா ரவுடி கெட்டப்பிற்கு மாறிவிட்டாரா? என்று கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.