சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரேம்ஜி நிச்சயதார்த்தம்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ் இதோ..!!

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி அமரன். இவர் பல்வேறு படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பணிபுரிந்துள்ளார்.

   

சென்னை 28 படத்தில் இடம்பெற்ற ஜல்சா, வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற லூசு பெண்ணே, மங்காத்தா திரைப்படத்தில் இடம் பெற்ற விளையாட்டு மங்காத்தா ஆகிய பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து அசத்தினார்.

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜி ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸ் ஆன சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்தார்.

45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் இயக்குனரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களை வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தோம்.

ஆனால் நண்பர் ஒருவர் பொதுவெளியில் திருமண பத்திரிகையை பகிர்ந்து விட்டார். அது வைரலானது. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்கிறேன்.

எங்களது பிரைவசிக்கு மதிப்பு இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்துங்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திப்போம் என கூறியிருந்தார்.

நேற்று பிரேம்ஜி மணமகள் இந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று திருத்தணி முருகன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.