
நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறி பல சர்ச்சைகளுக்கு ஆளானவர். மேலும், நடிகர்கள் நடிகைகளிடம் பரபரப்பான கேள்விகளும், முகம் சுளிக்கும் வகையிலான கேள்விகளையும் கேட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியனின் கண்ணகி திரைப்படத்திக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அவரிடம் வீட்டில் தான் கணவன் மனைவி சண்டை என்றால் வெளியிலுமா? உங்கள் படமும், உங்களின் கணவர் படமும் அடுத்தடுத்து வெளியாகிறது? என்று கேட்டார்.
இதனால் அப்செட்டான கீர்த்தி பாண்டியன், வீட்டில் நாங்கள் சண்டை போடுவதை நீங்கள் வந்து பார்த்தீர்களா? என்று கேட்டார். உடனே, பயில்வான் ரங்கநாதன், வீட்டில் சண்டை வந்தால் தான் அது இல்லற வாழ்க்கை. இரண்டு படத்துல யார் படம் வெற்றி பெற வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு கீர்த்தி பாண்டியனின் அருகில் இருந்த நபர், நீங்கள் பார்த்து எந்த படம் வெற்றி பெறும் என்று கூறுகிறீர்களோ, அந்த படம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அப்போதும், விடாத பயில்வான் ரங்கநாதன், அவர் பதில் கூறட்டும் என்று மீண்டும் கீர்த்தி பாண்டியனிடம் உங்கள் படத்தை கணவர் பார்த்தாரா? என்ன கேட்டார். அதற்கு கீர்த்தி பாண்டியன் அவர் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியதாக தெரிவித்தார். உடனே அந்த கூட்டத்திலிருந்து பயில்வான் ரங்கநாதன் வெளியேறி விட்டார்.