
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் இணைந்து நடித்த ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட அந்த படப்பிடிப்பில் நண்பர்களான அவர்கள், தற்போது வரை அந்த நட்பை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், வலைப்பேச்சு சக்திவேல் தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தற்போது வா வாத்தியாரே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயத்தில், நடிகர் ஜெயம் ரவி ஜீனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரின் திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் ஈவிபி ஸ்டுடியோவில் தான் அடுத்தடுத்த தளங்களில் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த இரு திரைப்படங்களிலும் கதாநாயகியாக கீர்த்தி செட்டி தான் நடித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.