சென்னை மேயராகப்போகும் கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததின் மூலமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

   

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள கதாநாயகிகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். எனினும், சமீப நாட்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இருப்பினும், தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிவப்பு நிற புடவை கட்டி அழகாக சிரித்துக்கொண்டே கீர்த்தி சுரேஷ் பொங்கல் வைக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.