நீண்ட நாட்கள் கழித்து… கேரள நண்பர்களுடன் கொண்டாட்டம்… கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படங்கள்…!

நடிகை கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் வெளிவந்து விட்டது.

   

அத்திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகி விட்டார். இவர் நடித்த மகாநதி திரைப்படம் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது.

தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நீண்ட நாட்கள் கழித்து தன் நண்பர்களை கேரளாவில் சந்தித்திருக்கிறார். அவர்களுடன் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.