பட்டப் பகலில் படகில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை மாளவிகா… புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் ரசிகர்கள்…

‘கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு’ எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நடிகை மாளவிகா. இவரது இயற்பெயர் ஸ்வேதா கோனுர். தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார் நடிகை மாளவிகா. திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

நடிகை மாளவிகா தற்பொழுது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு படகு சவாரி செய்யும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர அது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.