
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை மஞ்சுவாரியர் தொடக்கத்தில் மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன் பிறகு, இயக்குனர் வெற்றிமாறன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. எனவே, அதனைத்தொடர்ந்து அஜித்குமாரின் துணிவு திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் உடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மஞ்சு வாரியார் மலையாளத்தில் நடித்திருக்கும் புட்டேஜ் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்திருக்கிறது. இணையதளங்களில் வைரலாகி வரும் அந்த போஸ்டரில் படுக்கையை காட்சி இருக்கிறது. அதில், படு ஆபாசமாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியரா? என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அது அவர் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.