‘அழகி’ பட நடிகை நந்திதா வா இவர் !!! ஆள் அடையாளமே தெரியலையே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகை  நந்திதா தாஸ்.இவர் மும்பையில் சேர்ந்தவர் . இவர் அப்பா  கலைஞர் ஜதின்தாஸ், தாய்  வர்ஷா தாஸ் ஒரு எழுத்தாளர்.

   

இவர்  சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றார்.மேலும்  மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் Geography இளங்கலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த தில்லி  சமூகப்பணிப் பள்ளியில் Social Work முதுகலை பட்டமும் பெற்றார்.

இவர் தமிழில் தீ, பூமி, பாவந்தர், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி, கம்லி, பிஃபோர் தி ரெய்ன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் , தெலுங்கு,இந்தி, கன்னடம் ,பெங்காலி, மலையாளம், உருது, மராத்தி, ஒரியா ,ஆங்கிலம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகைமட்டுமல்ல  இயக்குனரும் கூட.2008 ஆம் ஆண்டு இவர்  இயக்கதில் வெளியான  ‘ஃபிராக்’  என்ற படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இப்படம் டொராண்டோ திரைப்பட விழாவில்  ஒளிபரப்பானது .

இப்படமானது  50 க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பயணம் செய்து 20 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.இவர் இயக்கிய இரண்டாவது படம் ‘மாண்டோ’படம் 2018 ஆம்  ஆண்டு  வெளியானது .  இப்படமானது 20 ஆம் நூற்றாண்டின் இந்தோ-பாகிஸ்தானி சிறுகதை எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை பற்றி எடுத்த  படம்

இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ” அன் செர்டெய்ன் ரிக்கார்ட் ” பிரிவில் திரையிடப்பட்டது. .நடிகை  நந்திதா சௌமியா சென்  என்பவரை காதலித்து 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து  கொண்டார் .இருவரின்  கருத்து வேறுபாட்டின்  காரணமாக  2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நடிகை  நந்திதா தொழிலதிபரான சுப்தோஷ் என்பவரை  2010 ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்துகொண்டார்.  இருவரின்  மன வேறுபாடு  காரணமாக 2017  விவாகரத்து பெற்றனர்.இவர் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கூட நடித்திருந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சோசியல் மீடியாவில்  ஆக்டிவாக உள்ளவர். தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.