புன்னகை அரசி நடிகை சினேகாவின் அழகிய வளைகாப்பு புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகைகளில்  ஒருவராக வலம் வருபவர் நடிகை  சினேகா. இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை ராசாராம் தாய் பார்வதி. இவருடைய இயற்பெயர் சுகாசினி ராஜாராம்.

   

இவர்  ஓன்  ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு   2000 ஆம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல நடிகர் மம்முட்டியுடன்  இணைந்து ‘ஆனந்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இவர் தமிழில் புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் போன்ற படங்களுக்கு விருதை பெற்றுள்ளார்.இவர் தமிழில் சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்று பலராலும் அழைக்கப்படுவார் நடிகை சினேகா.இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை சினேகாபிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம்  சினிமாவில் இருந்து  விலகி தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.இவர்களுக்கு விஹான் என்ற ஆண் குழந்தை ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர் நடிகை மட்டுமல்ல சரவணா ஸ்டோர், ஹார்லிக்ஸ், ஆசிர்வாத் போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் .இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

ZEE தமிழ் டிவியில்  ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக பணியாற்றினார். தற்போது இவரின் வளைகாப்பு  புகைப்படங்கள் சில  இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.