எல்லா ஆண்கள் முன்னாடியும்… கூச்சமின்றி ஓபனா அந்த வார்த்தையை சொன்ன நயன்தாரா…!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, 9 ஸ்கின் எனும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும்  நிறுவனத்தை நடத்தி கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 எனும் சானிட்டரி நாப்கின் பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர். அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பங்கேற்றனர்.

   

அதில் நயன்தாரா பேசியவாதவது, இது சுயநலமா இருக்குனு சில பேர் சொல்வாங்க. இதில் சுயநலம் இருக்கு. ஆனால் அந்த சுயநலத்திற்கு பின்னாடி இருக்கும் பொதுநலம் தான் அதனை  நியாப்படுத்துகிறது. சமூக அக்கறையோடு இருக்க நினைக்கிறோம். இது எல்லாருக்கும் ஒரு தொழில் தான்.

எல்லாருக்குமே பணம் வரும். அது மகிழ்ச்சியான விஷயம் தான். ஒவ்வொரு பெண்ணும், அவங்க வீட்டில் அப்பாவிடமோ, அண்ணனிடமோ காசு கேட்க வேண்டியதில்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே செய்றீங்க. அதற்கு ஒரு வாய்ப்பை கோமதி மேடம் தருகிறார். அவருடன் சேர்ந்து ஃபெமி 9 நடத்துவது ரொம்ப முக்கியமானது.

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும்  போய் சேரவில்லை என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாடி எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் கூறியதில்லை. ஆனால், இப்போது ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம்.

அதுவே மிகப்பெரிய மாற்றம். ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கம் மாதவிடாய் குறித்த  விழிப்புணர்வு நம் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் மிகுந்த சானிட்டரி நாப்கின் தர வேண்டும் என்று பேசியுள்ளார்.