சவுக்கு சங்கருக்கு சவுக்கடி.. பயங்கரமான பதிலடி கொடுத்த நிவேதா பெத்துராஜ்.. என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க..!

சமூக வலைதளங்களில் அதிக பிரபலமடைந்த சவுக்கு சங்கர் சமீபத்தில் தன் youtube சேனலில் அமைச்சர் உதயநிதி, தன் ரசிகை நிவேதா பெத்துராஜிற்கு துபாயில் 50 கோடி ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று பேசி இருந்தார். அந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

   

இதனைத் தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜ், தன் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சமீப நாட்களாக எனக்கு அதிக பணம் செலவு செய்யப்படுவதாக வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கு நான் எதுவும் கூறாமல் இருக்க காரணம் இந்த பிரச்சனை பற்றி பேசுபவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன்னதாக அதன் உண்மை தன்மையை தெரிந்து இருப்பார்கள் என்று நினைத்தேன்.

இந்த தவறான வதந்தியால் சமீப நாட்களாக நானும், என் குடும்பத்தினரும் கடும் மன அழுத்தத்தில் உள்ளோம். தவறான செய்தியை பரப்புவதற்கு முன்பு சிறிது யோசிக்க வேண்டும். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவள். 16 வயதிலிருந்து பொருளாதார ரீதியாக தன்னிச்சையாகவும் உறுதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

என் குடும்பத்தினர் தற்போது வரை துபாயில் தான் இருக்கிறார்கள். நாங்கள் இருவது ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் வசிக்கிறோம். சினிமா துறையில் கூட நான் தற்போது வரை இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று யாரிடமும் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டதே கிடையாது.

20 திரைப்படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அந்த வாய்ப்புகள் தான் என்னை கண்டுபிடித்தது. நான் எப்போதும் பணி அல்லது காசுக்காக பேராசை பட்டதில்லை. என்னை பற்றி தற்போது வரை கூறப்பட்ட எந்த தகவலும் உண்மை கிடையாது என்பதை உறுதியாக கூறுகிறேன். 2013 ஆம் வருடத்திலிருந்து ரேசிங்கில் எனக்கு ஆர்வம் இருந்தது.

சென்னையில் நடைபெறும் போட்டிகள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள் என்னை இந்த அளவிற்கு பிரபலப்படுத்தும் விதத்திற்கு நான் முக்கியமானவள் கிடையாது. நான் மிகவும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் போன்று நானும் வாழ்க்கையில் கடும் போராட்டங்களை எதிர்கொண்டு கடைசியில் மனம் மற்றும் எமோஷனலாக நல்ல இடத்திற்கு வந்திருக்கிறேன்.

இதனை தொடரவே விரும்புகிறேன். தவறான தகவலை பரப்பியதற்காக நான் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் பத்திரிக்கை துறையில் மேலும் சிறிது மனிதாபிமானம் உள்ளது. இனி இது போன்ற தவறான வதந்திகளை யாரும் பகிர மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு குடும்பத்தினரின் நற்பெயரை கெடுப்பதற்கு முன்பாக நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களை சரி பார்த்து, எங்கள் குடும்பத்தினருக்கு இனி எந்த காயங்களும் தராமல் இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.