மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் இளம் வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை… யார் தெரியுமா?… இதோ பாருங்க…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

   

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியதர்ஷினி. இவர் சின்னத்திரையில் பிரபல ஆங்கராக வலம் வந்தவர். தொகுப்பாளினி பிரியதர்ஷினி பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘தாவணி கனவுகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தமிழில் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இவர் இதய கோயில்’ மற்றும் மலையாளத்தில் ‘சுப யாத்ரா’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி.அதன் பிறகு ‘ஜித்தன்’ ரமேஷின் ‘புலி வருது’, பரத்தின் ‘காளிதாஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார்.

விஜய் டிவியின் சீனியர் ஆங்கராக வலம் வந்த இவர்,  நாகம், நாகதேவதா, குற்றவாளிகள் உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.கோலங்கள் மற்றும் ரேகா ஐபிஎஸ் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பிரியதர்ஷினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் நன்கு தெரியும். இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியதர்ஷினி தனது இளம் வயதில் மறைந்த அரசியல் பிரபலம் கருணாநிதி அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…