விஜய்க்கு அண்ணனாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?… வைரலாகும் தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம்’ வாரிசு’. இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ரிலீஸ் ஆனது.

   

இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட நிலையில், தற்போது இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வசூலில் சக்க போடு போட்டு வரும் திரைப்படம் வாரிசு .

இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தற்பொழுது 300 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்து வருவதாக இணையத்தில் கூறப்படுகிறது. துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படத்தின் மொத்த வசூல் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பள விவரங்கள் சமீபகாலமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இத்திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.

இப்படத்தில் விஜயுடன் நடிப்பதற்காக ரூபாய் 60 லட்சம் சம்பளமாக நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.