2005 ல் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் ‘சந்திரமுகி’. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதில் வரும் அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான். இப்பாடலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரஹர்ஷிதா.
இவர் தமிழில் பல படங்களில் சாமி வேஷத்திலும் நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்ல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் ஒரு குறும்பட தயாரிப்பாளரும் கூட .பிரஹர்ஷிதா நாளை இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.
சீரியல் நடித்துக் கொண்டே தனது கல்வியும் தொடர்ந்தார். இவர் பி எஸ் சி எலக்ட்ரானிக் மீடியா படித்துள்ளார்.
நடிகை பிரஹர்ஷிதா கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.
‘சந்திரமுகி 2’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது அதில் பொம்மி நடிக்கிறாரா என்று தெரியவில்லை இந்நிலையில் அவர் ஒரு ஊடகத்துக்கு அளித்திருந்த பேட்டியில்.
நான் போஸ்ட் புரொடக்ஷன் கம்பெனி ஒன்றின் பணிகளை செய்து வருகிறேன். அதே போல பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன்.
விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று கூறினார். சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதை பற்றி எதுவும் அவர் கூறவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளார்.
இவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,
‘சந்திரமுகி படத்தில் குழந்தையாக நடித்த இவருக்கு ஒரு குழந்தையா ?’ என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.