விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ‘மௌன ராகம்’. இதில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகை சிப்பி ரஞ்சித்.
இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த மௌன ராகம் சீரியல் ஆனது பெங்காலி சீரியலை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
இவர் 1992 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘தலஸ்ட்னானம்’ படத்தின் மூலமாக முதலில் திரையுலகில்அறிமுகமானார்.
அதன் பின் இவர் மலையாள படங்களில் சில துணை வேடங்களிலும், பல முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி கண்ட படம் ‘ஜானுமதா ஜோடி’ என்ற
படத்தில் நடித்துள்ளார்.
சிப்பி ரஞ்சித் சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில விருதும் , கன்னடப் படத்திற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
இவர் தமிழ் ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் ஷில்பி என்ற பெயரில் தற்பொழுது நடித்து வருகிறார். ரமேஷ் அரவிந்த் – ஷில்பி கன்னடத்தில் பிரபலமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
நடிகை சிப்பி ரஞ்சித் மலையாள பட தயாரிப்பாளரான ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர் திருமணத்திற்கு பிறகு சீரியலில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தார்.
இவரது தயாரிப்பில் ஸ்த்ரீ ஓரு சந்தாவனம், ஆகாஷதூத்து உள்ளிட்ட பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
பல்வேறு பிரபலமான மலையாள நாடகத் தொடர்களில் நடித்ததற்காக இவர் மக்கள் மத்தியில் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகும் ‘மௌனராகம்’ சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
தயாரிப்பாளர், தொகுப்பாளினி, விளம்பர நடிகை என நடிகை சிப்பிரஞ்சித் பன்முக திறமை கொண்டவர்.
இவருக்கு அவந்திகா என்ற மகளும் உள்ளார். இவர்களின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.