40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் சாதித்த மீனா… பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ‘மீனா 40’ விழா… இவுங்க கூடவா கலந்துக்கிட்டாங்க… லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

   

இவர் 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த  ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்திலும் சிறுமியாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாகவே மீனா 45 திரைப்படங்களில்நடித்துள்ளார்.

பின்னர் 1990-ல் ‘ஒரு புதிய கதை’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின்பு தமிழில் ராஜ்கிரணுடன் அவர் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆனார்.

தமிழ் மட்டுமில்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தார்.

தென்னிந்தியாவின் அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் மீனா ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே 2009ல்  வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் மீனா.

அவரது திருமணத்துக்கு பிறகு அதிகமாக குணசித்திர வேடங்களில் மட்டும் நடித்து வந்தார் நடிகை மீனா. இவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் ‘திரிஷ்யம்-2’ படம் வெளிவந்தது.

இதுவரையிலும் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை 4 முறை பெற்றிருக்கிறார். ஆந்திர மாநில அரசின் விருதினை 2 முறை பெற்றிருக்கிறார்.

பிலிம்பேர் விருதினை 2 முறை பெற்றிருக்கிறார். சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை 4 முறை பெற்றிருக்கிறார். கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார்.

ஏசியாநெட் விருதினையும் பெற்றிருக்கிறார். நடிகை மீனா சினிமாவுக்கு வந்து தற்போது 40 ஆண்டுகள் ஆகிறது.

இதனை தற்போது விழாவாக கொண்டாடி உள்ளனர். ‘மீனா 40’ என்கிற பெயரில் தனியார் நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இதில் நடிகை மீனாவின் பேவரைட் ஹீரோவான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி 80 மற்றும் 90ஸில் கலக்கிய நடிகை மீனாவின் சமகால நடிகைகளான ராதிகா, தேவையானி, ரோஜா, சினேகா, சங்கவி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ராஜ்கிரண் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ் உள்பட ஏராளமானோர் ‘மீனா 40’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை மீனாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்பொழுது இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.