”என் இதயம் எப்போதும் உன்னுடையது”…  மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கியூட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராதிகா சரத்குமார்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். இவர் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து அசத்தி இருந்தார்.

   

சமீபத்தில் பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சரத்குமார் 2005இல் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள்.

சரத்குமாருக்கும் நடிகை ராதிகாவுக்கும் பிறந்தவர்தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். நடிகர் சரத்குமாரின் மகனான ராகுல் சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மகன் ராகுல் சரத்குமாரின் பிறந்த நாளை ராதிகா சரத்குமார் அவரது அக்கா ரேயான்  மற்றும் மொத்த குடும்பமும் இணைந்து சூப்பராக கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் சரத்குமாருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவரது அக்கா கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தம்பி ராகுல் சரத்குமாருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Rayane R Mithun (@rayanemithun)