ஒரே எழுத்தை டைட்டில் கொண்டு வெளிவந்த தமிழ் படங்கள் என்னன்னு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பல்வேறு தலைப்புகளை கொண்டுள்ளத்து. அதிலும் வித்தியாசமாக ஒரே எழுத்தில் தலைப்பு வைத்து வெளியான படங்களை பற்றி இதில் காண்போம்.
1.நீ:

இயக்குனர் டிஆர் ராமண்ணா இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நீ’ . இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, நாகேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது பணக்காரனாக இருக்கும் கதாநாயகன் அனாதையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது.

   

2.தீ:

இயக்குனர்ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தீ’ இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், சுமன், சௌகார் ஜானகி ஸ்ரீ பிரியா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக உழைக்கும் தொழிற்சங்கவாதிகளின் கதையை மையமாக வைத்து இப்படம் அமைந்துள்ளது.

3.ஸ்ரீ :

இயக்குனர் புஷ்பவாசகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்ரீ’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி எஸ் முரளிதரன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, காயத்ரி, வடிவேலு, இளவரசு போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் தந்தை மற்றும் மகனின் பாசப் போராட்டங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை சமாளிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.\

4.ஜி:

என் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித், திரிஷா, விஜயகுமார், மணிவண்ணன், மனோபாலா, சூரி, வெங்கட் பிரபு போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித் கல்லூரியில் ஏற்படும் பிரச்சனை காரணமாக சூழ்நிலையால் மாட்டிக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.

5.ஈ:

இயக்குனர் எஸ் பி ஜனதன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈ’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜீவா, நயன்தாரா, ஆஷிஷ் வித்யார்த்தி, பசுபதி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பணத்திற்காக டாக்டர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

6.பூ:

இயக்குனர் சசி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பூ’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், பார்வதி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது இரண்டு பேரின் மனசுகளில் ஏற்படும் வெவ்வேறு உணர்வுகளை மையப்படுத்தி அமைந்திருக்கும்.

7.ஐ:

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஐ’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி, காமராஜ், சீனிவாசன், சரத்குமார் அழகு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடி பில்டராக இருக்கும் விக்ரம், ஒரு சூழ்நிலையில் அவருடைய தோற்றம் சிதைக்கப்பட்ட பிறகு அவருக்கு ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்துள்ளது.

8.கோ:

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கோ’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்பாய் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் கல்லூரியில் நண்பர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கு பிடித்தமான வெவ்வேறு வேலைகளை தேடிக்கொள்வார்கள். அதில் நண்பராக இருப்பவர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று தெரிந்த பிறகு ஏற்படும் நிகழ்வுகளை வைத்து கதை அமைந்திருக்கும்.