குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

90’s களின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வளம் வந்தவர்.

   

1992ல் தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து உள்ளதை அள்ளித்தா திரைப்படத்தின் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

 

கடைசியாக 2019 பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் 2010 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் டொரண்டோவில் செட்டிலான ரம்பா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தை பிறந்த பிறகு இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் பின்னர் இருவரும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சேர்ந்து வாழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து மூன்றாவதாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது. கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா, ஶ்ரீ சந்திர மோவுலேஷ்வரர் சிவாலயம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கின்றார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…