கண்டதை எல்லாம் வைரலாக்குறீங்க…. இத பண்ணுங்க பாப்போம்… துணிச்சலா அந்த புகைப்படங்களை வெளியிட்ட ரட்சிதா…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரட்சிதா, தொடர்ந்து பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும், அத்தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெவ்வேறு சீசன்களில் தனித்தனியாக பங்கேற்று மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றனர்.

இருவருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனை குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தான் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் ரட்சிதா, என் படத்திற்கான அப்டேட் என்று புகைப்படங்களை வெளியிட்டு கண்டதை வைரல் ஆக்குவதை விட இதை ஆக்குங்க என்று குறிப்பிட்டுள்ளார்.