‘பாத்ரூமிலேயே படுத்து தூங்கலாம்… வீட்டிற்குள்ளேயே டேஸ்ட்டான ஆப்பிள் மரம்’… நடிகை ரேகா வெளியிட்டுள்ள ஹோம் டூர் வீடியோ… வியந்து போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கானா என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.ஆனால் அதில் அவர் அதிக நாட்கள் இருக்கவில்லை. அதன் பிறகு விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஷோக்களில் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரேகா அமெரிக்காவில் அவரது சகோதரியின் தோழி வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது வீட்டை வீடியோ எடுத்து ரேகா வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஹோம் டூர் வீடியோவில் ‘வீட்டின் பாத்ரூமிலேயே படுத்துவிடலாம்.. அப்படி இருக்கிறது’ என அவர் கூறி இருக்கிறார். மேலும் வீட்டிலேயே ஆப்பிள் மரம் இருக்கிறது என அவர் காட்டி இருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.

இதோ  அந்த ஹோம் டூர் வீடியோ…