ரஜினிக்கு இப்படி ஒரு காதல் கதையா?…. லதாவை எப்படி மணந்தார் தெரியுமா?…. இதோ ஒரு சுவாரசிய தொகுப்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்த இவர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதே ஒரு சுவாரஸ்யமான காதல் கதை தான்.

   

எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்து வந்த லதா என்ற மாணவிக்கு கல்லூரி பத்திரிகைக்காக அன்றைய முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியை பேட்டி எடுத்த வர வேண்டும் என்று வேலை கொடுக்கப்பட்டது.

அந்த பேட்டி தான் லதா வெறும் லதாவாக இல்லாமல் லதா ரஜினிகாந்தாக மாறுவதற்கு தொடக்க புள்ளியாக அமைந்தது.

தில்லு முல்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி மற்றும் லதா இருவரும் முதன்முறையாக நேரில் பார்த்துக் கொண்டனர்.

பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது லதாவை பார்த்து திருமணம் செய்து கொள்கிறாயா என்று ரஜினி கூறியுள்ளார்.

அதற்கு உடனே லதா தனது பெற்றோரிடம் கேட்டு சொல்வதாக கூறியுள்ளார்.

அதன் பிறகு ரஜினியை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக லதா அறிந்து கொள்ள ஆரம்பித்தார்.

அதாவது குழந்தை கால வாழ்க்கை முதல் இளம் வயதில் அம்மாவை இழந்து நடிகனாக சாதித்தது வரை ரஜினியை பற்றி அனைத்தையும் லதா அறிந்து கொண்டார்.

அவருக்குத் தாய்மை அன்பு தேவை என்பதை லதா உணர்ந்தார்.

நரம்பியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ரஜினி அதிலிருந்து மீண்டு வந்தால் மொட்டை அடித்துக் கொள்வதாக லதா வேண்டிக் கொண்ட நிலையில் அதனைப் போலவே ரஜினிக்கு குணமானதும் அவர் மொட்டை அடித்துக் கொண்டார்.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.

அனைத்தும் சரியான பிறகு 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி லதா மற்றும் ரஜினி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட அனைத்து மாற்றங்களுக்கும் லதா ரஜினியின் காதல் மற்றும் அன்பு தான் காரணம் என ரஜினியை பலமுறை கூறியுள்ளார்.

அன்பான மனைவி இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு இவர்கள் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தற்போது ரஜினி மற்றும் லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மற்றும் லதாவின் அழகிய புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.