
நடிகை ரேகா நாயர் தன் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம்? என்பது பற்றி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.
நடிகை ரேகா நாயர் என்றாலே சர்ச்சை தான் என்ற அளவிற்கு மனதில் படுவதை அப்படியே பேசும் பழக்கம் கொண்டவர். இவர் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் மூன்று தடவை தற்கொலை செய்ய முயற்சித்தேன்.
அதன் பின், என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிக் கொண்டேன். ஐஏஎஸ் தேர்வு எழுத டெல்லி செல்லும் போது என் கணவர் எனது சர்டிபிகேட்டுகளை கிழித்தார். அப்போது என் சர்டிபிகேட்டுகளை கிழிப்பதற்கு நீ யாரு? என்று அதிகமான டிகிரிகளை படிக்க தொடங்கினேன். என் வாழ்க்கையை முடிக்க போகும் சமயத்தில் தான் எனக்குள் பூதம் இருப்பதை அறிந்து கொண்டேன்.
அப்போது நான் செத்துப் போயிருந்தால், அடையாளம் இல்லாமல் போயிருப்பேன். ஆனால் இப்போது 10 பேருக்கு என்னை தெரிகிறது இனிமேல் வாழ்க்கை பற்றிய கவலை கிடையாது யார் எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசட்டும் எதை நினைத்தும் நான் கவலைப்பட போவதில்லை என்று தீர்க்கமான தீர்மானம் எடுத்து முதல் கணவரை பிரிந்து விட்டேன் தற்போது எந்தவித கவலையும் இன்றி மகிழ்வாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்