
நடிகை ரேகா நாயர், மன்சூர் அலிகான் கூறியதில் என்ன தப்பு இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். எனவே, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ரேகா நாயர், இது பற்றி தெரிவித்திருப்பதாவது, மன்சூர் அலிகானை குற்றச்சாட்டும் இணையதளங்கள், அவர் பேசிய வீடியோ முழுவதையும் பார்த்தாங்களா?
நான் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால் இந்த சர்ச்சையை எளிதில் முடித்திருக்கலாம். லோகேஷ் கனகராஜ், அவரிடம் உடனே பேசி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். இந்த பிரச்சினையில் திரிஷாவிற்கு தான் என் ஆதரவு. மன்சூர் அலிகான் திரைப்பட பாணியில் பேசிவிட்டார்.
அவர் தவறாக எதுவும் கூறவில்லை. பொதுவெளியில் அதனை கூறியது தான் தவறு. படத்தில் கற்பழிப்பு காட்சிகளை எப்படி எடுப்பார்கள் என்று திரைத்துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களே இந்த பிரச்சனையில் முரண்பாடாக இருக்கிறார்கள். மன்சூர் அலிகான் திரிஷாவிடம் பேசியிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். சமூக வலைதளங்கள் தான் இவ்வாறான பிரச்சனைகளை இப்போது நடப்பது போன்று பெரிய விஷயமாக்குகின்றன என்று கூறியிருக்கிறார்.