
நடிகை ரேகா நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரையில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தன் மனதில் தோன்றுவதை அப்படியே பேசும் பழக்கம் கொண்ட இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியதாவது திரைத்துறையில் மட்டும் அட்ஜஸ்மென்ட் பிரச்சினை கிடையாது.
அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஆனால் திரைத்துறையில் நடப்பது அப்படியே தெரிந்து விடுகிறது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் ஐபோன், சொகுசு கார், ஈசிஆர் ல வீடு எல்லாம் வாங்கலாம் என்று நினைத்து நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். என்னை யாராவது பட வாய்ப்பு தருகிறேன் என்று படுக்கைக்கு அழைத்தால், அவரை பிடித்திருந்தால் சென்று விடுவேன்.
அவரை பிடிக்கவில்லை என்றால் போக மாட்டேன். சரக்கு மற்றும் கஞ்சா அடிக்கக்கூடாது என்று எனக்கு ஒரு ரூல் இருக்கிறது. என்னிடம் வந்து அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு கேட்டால் என் உடலுக்கு எத்தனை கோடி தர முடியும்? என்று கேட்பேன். அது அவனால் முடியாது. மூடிக்கொண்டு போய்விடுவான்.
அதேபோன்று பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்தால் மறுத்து விட வேண்டும். பிறகு யாரும் வற்புறுத்த மாட்டார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு பத்தாண்டுகள் கழித்து அந்த இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் இவ்வாறு செய்தார் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.