
கடந்த 1984 ஆம் வருடத்தில் இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சத்தை அளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாதனா. தற்போது வரை 25-ற்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை பற்றி தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, நான் அனிருத்தின் தந்தையோடு நடித்துள்ளேன். அந்த சமயத்தில், அவரின் மகன் இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று நான் கனவுல கூட நினைத்து பார்க்கவில்லை.
அனிருத் தந்தை ரொம்பவும் அமைதியாக இருப்பார். நான் ஒரு பக்கம் என் வேலையை பார்த்தால், அவர் ஒரு பக்கம் அவரின் வேலையை பார்ப்பார். எந்தவித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத நபர் தான் அவர் என்று தெரிவித்திருக்கிறார்.